ரியல் லைஃபிலும் வர்மனாக மாறி போதையில் போலீசிடமே ரகளை செய்ததால் கைதான விநாயகன்... ஜாமீனில் விடுவிப்பு

By Ganesh A  |  First Published Oct 25, 2023, 11:22 AM IST

ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் விநாயகன், நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.


ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். இவர் அதற்கு முன் தமிழில் திமிரு, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற டெரரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவர் ஜெயிலர் படத்தில் வர்மனாக பேசிய டயலாக்குகள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் செம்ம டிரெண்டிங்கில் உள்ளது.

இவர் மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகராகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு இவர்மீது பெண்கள் பாலியல் புகாரை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி மீடூ சர்ச்சையிலும் விநாயகன் சிக்கினார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர், நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவரை போலீசார் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த சமயத்தில் குடி போதையில் இருந்த விநாயகன் போலீஸ் ஸ்டேஷனில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து எர்ணாகுளம் டவுன் போலீசார் விநாயகனை கைது செய்தனர். நேற்று மாலை கைது செய்யப்பட்ட விநாயகன் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது.

நடிகர் விநாயகன் படத்தில் வர்மனாக குடிபோதையில் போலீசை மிரட்டியது போல் நிஜ வாழ்க்கையிலும் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்து சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விநாயகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மது போதையில் தகராறு? ஜெயிலர் பட வில்லன் விநாயகனை கைது செய்த போலீசார் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

click me!