
திரைத்துறையில் தம்மை யாருக்கும் போட்டியாக நினைக்காத தல அஜித், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை. ஆனால், வலைதளங்களில் தமது ரசிகர்கள், பிற நடிகர்கள் அவர்களின் குடும்பங்களை விமர்சிக்கக் கூடாது என்று அடிக்கடி அறிவுரை கூறியிருக்கிறார்.
ரசிகர் பட்டாளத்தை தன வசம் வைத்துள்ள நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மற்ற நடிகர்களை விட அஜித்துக்கு தனி அந்தஸ்தே சினிமா துறையில் உள்ளது.
ஆனால் அஜித் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த சம்பவம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. அதாவது கலைஞர் முதல்வராக இருந்த போது அவருக்கு சினிமா துறை சார்பாக பாராட்டு விழா நடந்துள்ளது. அப்போது மேடையில் பேசிய அஜித் தமிழை தவறாக உச்சரித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அஜித் ஆதரவாளர்கள் அப்போது ஜாக்குவார் தங்கத்தின் வீட்டை சூறையாடி உள்ளனர். பல ஆண்டுகள் கடந்தும் அஜித் ரசிகர்ளுக்கு ஜாக்குவார் தங்கத்தின் மீதான கோபம் தீரவில்லை.. இன்னம் அவரை விமர்சித்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்..
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜாக்குவார் தங்கம்..தனது வீடு சூறையாடப்பட்டிருப்பது குறித்து நடிகர் அஜித் நேரில் மன்னிப்பு கேட்டதாகவும், நஷ்ட ஈடு கொடுப்பதாக கூறியதாகவும் கூறியுள்ளார். ஆனால் தான் அந்த நஷ்ட ஈட்டை வாங்க மறுத்து விட்டதாகவும் ஜாக்குவார் தங்கம் தெரிவித்திட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.