
இதுவரை 7 சீசங்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை இந்த முறை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் ஒரு நடுவராக விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது என்றே கூறலாம். பிற பிக் பாஸ் சீசன்களை போல அல்லாமல், இந்த முறை ஒன்பது ஆண் போட்டியாளர்கள் மற்றும் 9 பெண் போட்டியாளர்கள் தனித்தனியே பிக்பாஸ் வீட்டுக்குள் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியை தொடங்கியது.
அந்த நிகழ்ச்சி தொடங்கிய முதலாவது நாளிலேயே நடிகை சாஞ்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதன் பிறகு மீண்டும் ரகசிய கதவு வழியே அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளப்பட்டார். இந்த சூழலில் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் ஆன நிலையில், அவரை தொடர்ந்து அஅர்னவ், மற்றும் தர்ஷா ஆகியோர் தற்பொழுது போட்டியை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறையா பேசாதீங்க; செயலில் காட்டுங்க - த.வெ.க தலைவர் விஜய்க்கு அறிவுரை சொன்ன நமீதா!
19 பேருடன் துவங்கிய பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது 15 பேர் விளையாடி வரும் நிலையில் சுனிதா மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவருக்கு இடையே மோதல் போக்கு மூண்டு வருகிறது. சுனிதா தான் எந்த விஷயம் செய்தாலும் அதில் ஏதோ ஒரு குறை கண்டுபிடித்து தன்னை குத்திக்காட்டிக் கொண்டே இருப்பதாக ஜாக்லின் கூறியிருக்கிறார். அவர்கள் இருவரும் விஜய் டிவியை சேர்ந்தவர்கள் என்றாலும், தற்பொழுது இவர்களுக்கு இடையே தான் பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது.
பிற பிக் பாஸ் சீசன்களைப் போல இந்த சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் குரூபிசம் இருக்கிறது என்றும் மக்களும் கூறிவரும் நிலையில், தன்னால் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செயல்பட முடியவில்லை என்று சௌந்தர்யாவிடம் அழுது புலம்பி இருக்கிறார் ஜாக்குலின். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹாப்பி எண்டிங்; சூர்யா 45 முடிஞ்ச கையோடு அடுத்த படத்திற்கு செல்லும் RJ பாலாஜி - Viral Video!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.