
வெள்ளித்திரையில் மின்னும் நட்சத்திரங்களுக்கு நிகராக தற்போது மாறி வருகின்றனர், சின்னத்திரை நாயகிகளும் தொகுப்பாளர்களும். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வரும் நடிகர் நடிகைகள் பலர் உள்ளனர்.
சமீபத்தில் தான் சின்னத்திரை நாயகி, பிரியா பவானி நடித்து வெளிவந்த மேயாத மான் திரைப்படம் ரசிகர்களிடமும், வசூல் ரீதியாகும் நான்றாக ஓடியது.
இந்நிலையில் தற்போது அதே தொலைகாட்சியில் 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியை ரக்ஷனுடன் தொகுத்து வழங்கிய, தொகுப்பாளினி ஜாக்குலின் நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ள கோலமாவு கோகிலா என்கிற படத்தில் நயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் சிலர் நீங்க அழகா இருக்கீங்க உங்க குரல் தான் கொஞ்சம் கரகரன்னு இருக்கு என்று கிண்டல் செய்துள்ளனர்.
இதுபற்றி அவர் கூறுகையில், அதற்காக நான் கவலைப்படுவதில்லை. எனது லிப்ஸ்டிக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் என்னால் மாற்ற முடியும், குரலை மாற்றுவது சாத்தியமில்லை. நான் எப்படியோ அதையே ஏற்றுக்கொள்கிறேன். நான் பாடகியாக முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்பட போவதில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.