மீண்டும் இணையும் மெர்சல் ஹீரோயின்கள்..!

 
Published : Dec 03, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
மீண்டும் இணையும் மெர்சல் ஹீரோயின்கள்..!

சுருக்கம்

again join mersal heroines

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தன்று பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல். திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய ஆதரவு கிடைத்தாலும் ஜிஎஸ் டி , மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை பற்றி விஜய் பேசிய வசனங்களுக்கு  தேசிய கட்சியினர் மிகப் பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இருப்பினும், அனைத்து ரசிகர்களின் ஆதரவோடும் தற்போது வரை மெர்சல் திரைப்படம் திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.  நித்யா மேனன் இந்தப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் காஜல் அகர்வால் மற்றும் நித்யாமேனன் இணைத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் சுதீர் வர்மா இயக்க உள்ளார். கதாநாயகனாக, சர்வானந்த் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் "எங்கேயும் எப்போதும்" மற்றும் ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நித்யா மேனன் மலையாளத்தில் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தப் படப் பிடிப்பில் கலந்துகொள்வர் என்றும், காஜல் அகர்வால் குயின் பட ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் படப் பிடிப்பு முடித்த பிறகு கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!