’ஜே.கே.ரித்திஷ் என்னும் அன்புத் தம்பியை இழந்துவிட்டேன்’...நாசர் இரங்கல்...

By Muthurama LingamFirst Published Apr 13, 2019, 5:24 PM IST
Highlights

பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் சற்று முன்னர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

பிரபல நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் சற்று முன்னர் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.

அரசியல்வாதியாக இருந்தாலும் திரையுலக வட்டாரத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் ஜே.கே. ரித்திஷ். ‘சின்னப்புள்ள’  படத்தில் சின்னி ஜெயந்த் மூலம்  அறிமுகமான அவர் ‘கானல் நீர்’,’நாயகன்’, ‘பெண் சிங்கம்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருந்தார்.

‘நாயகன்’ படப்பிடிப்பு காலத்தில் திரையுலகைச் சேர்ந்த நலிந்த கலைஞர்களுக்கு தேடித்தேடிச் சென்று பல உதவிகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க செயல்பாடுகளில் எப்போதும் முன்வரிசையில் வந்து நிற்பவர் என்று பெயரெடுத்தவர் ரித்திஷ்.

இவரது மறைவு குறித்துப் பேட்டி அளித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர்,” ஜே.கே.ரித்திஷ் என்னும் அரசியல்வாதி, நல்ல நிர்வாகி என்பதைத் தாண்டி எனது ஒரு நல்ல தம்பியை இழந்துவிட்டேன். என்னை விட வயதில் இளையவர். உடல் நலம் பேணுவதில் சிரத்தை எடுப்பவர் என்கிற வகையில் அவரது இழப்பு மிகவும் வருத்தம் தருகிறது”என்றார்.

click me!