
தல அஜீத்தின் மகள் அனோஷ்கா அவரது அம்மா ஷாலினியின் தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
2008ம் வருடம் ஜனவரி மாதம் 3ம் தேதி பிறந்த அனோஷ்காவுக்கு தற்போது 11 வயதாகிறது. அடுத்த தம்பி ஆத்விக் 2015 மார்ச் 3ம் தேதி பிறந்தார். அஜீத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு இந்த குடும்ப அங்கத்தினர்கள் மிக அபூர்வமாகவே வருவார்கள்.
ஆனால் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனது பெரும்பாலான நேரங்களை மனைவி குழந்தைகளுடனே செலவிடுவார் அஜித். தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் டப்பிங்குக்காக காத்திருக்கும் அஜீத், வரும் 18ம் தேதியன்று வழக்கம்போல் நீண்ட கியூவில் நின்று தேர்தலில் வாக்களித்துவிட்டுக் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.