Bigg Boss 5 iykkiberry : ஏவிக்சனுக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் ஹவுஷ்மேட்டுடன் ஐக்கி பெர்ரி: வைரல் வீடியோ உள்ளே

Kanmani P   | Asianet News
Published : Dec 07, 2021, 11:54 AM IST
Bigg Boss 5 iykkiberry : ஏவிக்சனுக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் ஹவுஷ்மேட்டுடன் ஐக்கி பெர்ரி: வைரல் வீடியோ உள்ளே

சுருக்கம்

Bigg Boss 5 iykkiberry: பிக் பாஸ் சீசன் 5 -ல் இருந்தது வெளியேறிய பிறகு நமீதா மரிமுத்தும், ஐக்கி பெர்ரி இருவரும் சேர்ந்து இன்ஸ்டாவில் லைவ்வாக ரசிகர்களை சந்தித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5-ல் இருந்து ஐக்கி பெர்ரி, 57 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் ஐக்கி பெர்ரியை ஏவிக்சன் ஆவதாக அறிவித்தார்.

ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேறியவுடன் ஐக்கி பெர்ரி தனது கெட்அப்பை மாற்றிவிட்டார் என்பது சமீபத்திய வைரலான செய்தி. இந்திய ராப்பர், பாடகி, பாடலாசிரியர், நடிகை, பிரபல ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர், சமூக ஆர்வலர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பல வித்தைகளை தன் வசம் வைத்துள்ள  ஐக்கி பெர்ரி  தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர். ராப் பாடகியாக மரியா பிறகு வெளிநாட்டவர் போல தனது முடியை கலர் செய்திருந்தார்.

பின்னர் பிக் பாஸ் சோவுக்குள் நுழைந்த பிறகு சமீபத்தில் நடந்த  கனா காணும் காலங்கள் - பள்ளிகூட  டாஸ்க்கிற்காக  ஐக்கி பெர்ரி மற்றும் அக்ஷரா ஆகியோரின் முடி நிறத்தை கருப்பு நிறமாக மாற்ற பிக் பாஸ் உத்தரவிட்டார். பின்னர் ஏவிக்சன் ​​ஐக்கி சமீபத்தில் தனது ஹேர் கலரை பழையபடி மாற்றி யுள்ள புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.டாக்டர் பெர்ரியின் புதிய தோற்றத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதற்கிடையே இசைவாணியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஐக்கி பெர்ரி, அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது இருவரும் தாங்கள் வருங்காலத்தில் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே இருவரும் ஆலோசித்ததாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினர். மேலும் தங்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாகவே வெளியேறிய நமீதா  மாரிமுத்துவை சந்தித்துள்ள ஐக்கி இன்ஸ்டா பேஜ் மூலம் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடியுள்ளனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!