
நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராவை கண்டதும் தன்னுடைய நடையை ராப் வாக் போல் மாற்றி நடந்து வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பல முன்னணி நடிகர் - நடிகைகள் தங்களுடை பிள்ளைகள் மீது கேமரா வெளிச்சம் படாமல் வளர்த்து வந்தாலும் சில சூழ்நிலைகளில், பிள்ளைகளை தங்களுடன் அழைத்து சொல்லவேண்டியது அவசியமாகி விடுகிறது. அந்த வகையில், ஐஸ்வர்யா ராய் பல நேரங்களில் தன்னுடைய மகளை தான் செல்லும் இடங்களுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: Katrina Kaif Wedding: கத்ரீனா - விக்கி திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி கொடுக்க தயாராக இருக்கும் ஓடிடி நிறுவனம்?
வெளிநாடுகளுக்கு ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், பட ஷூட்டிங் போன்றவற்றிக்கு சென்றாலும் மகளுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி பட்ட நேரங்களில் தன்னுடைய அம்மாவை பார்த்து வளரும் ஆராத்யா, விட்டால் அம்மாவையே மிஞ்சி விடுவார் போல.
மேலும் செய்திகள்: Sunny Leone: பளபளக்கும் டைட் உடையில்.. வளைந்து நெளிந்து தினுசு தினுசா போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரல் வீடியோ
ஆராத்யா ஐஸ்வர்யா ராய்யுடன் ஏர்போர்ட்டில் சாதாரணமாக நடந்து வரும் போது, திடீர் என பத்திரிக்கையாளர்கள் மற்றும் கேமராவை கண்டதும் தன்னுடைய நடையை ராப் வாக் போல் மாற்றி நடந்து வருவதை பார்த்த ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளை கடுப்பாக பார்த்தபின்னர் மீண்டும் சாதாரணமாக நடக்கிறார். இந்த வீடியோ தற்போது... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: Ineya: நடிகை இனியாவா இது? படு குண்டாக கும்முனு மாறி ரசிகர்களை செம்ம ஷாக்காக்கிய வைரல் போட்டோஸ்!
ஏற்கனவே அபிஷேக் பச்சன் தன்னுடைய மகளை நெட்டிசன்கள் விமர்சனம் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மிகவும் கோவமமாக பேட்டி ஒன்றில் பேசிய நிலையில், சும்மா இருந்த நெட்டிசன்கள் வாய்க்கு அவள் கிடைத்தது போல் இந்த வீடியோ கிடைத்தால் சும்மா விடுவார்களா? 10 வயதிலேயே அம்மாவை மிஞ்சும் அளவிற்கு ஆராத்யா நடந்து கொள்வதாக கூறி வருகிறார்கள்.
தற்போது வைரலாகி வரும் வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.