
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பரபரப்புக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ரம்யா கிருஷ்ணனுக்கு நிகழ்ச்சியின் மீதான அனுகுமுறை கமல் அளவுக்கு இல்லாததால், பெரியளவில் சோபிக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, குறைந்த வாக்குகளை பெற்ற போடியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தஞ்சாவூரை சேர்ந்த ஐக்கி பெர்ரி, பாப் பாடகி ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவரின் ரசிகர் வட்டம் பெரிதாகி உள்ளது. இந்நிலையில், பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ஐக்கி பெர்ரி தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்.
அப்போது பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்கள் காட்டிய அன்பால் மிகவும் நெகிழ்ந்து போனார். ரசிகர்களின் இத்தகைய லவ்வுக்காக தான் ரொம்ப நாள் ஏங்கி இருந்ததாகவும், பிக்பாஸ் மூலம் அது கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ஐக்கி தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.