BiggBoss 5: ‘கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே’ செம கடுப்பில் இமான்- நிரூப்பால் பிக்பாஸில் செம டுவிஸ்ட்

Ganesh A   | Asianet News
Published : Nov 29, 2021, 02:58 PM IST
BiggBoss 5: ‘கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே’ செம கடுப்பில் இமான்- நிரூப்பால் பிக்பாஸில் செம டுவிஸ்ட்

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதோடு, அவரை அந்த வாரம் யாரும் எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்க முடியாது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

அதன்படி இதுவரை நதியா சங், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, அபிஷேக் ராஜா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதில் அபிஷேக் ராஜா மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். இதுதவிர நடன இயக்குனர் அமீர், நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கேப்டன்சி டாஸ்க் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதோடு, அவரை அந்த வாரம் யாரும் எவிக்‌ஷனுக்கு தேர்ந்தெடுக்க முடியாது. 

அந்த வகையில் இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது’ போல் அவரது கேப்டன்சியை தனது காயின் மூலம் நிரூப் பறித்துக்கொண்டார். இதனால் இமான் அண்ணாச்சியின் கேப்டன்சி கனவு தகர்ந்தது. 

நிரூப்பின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த இமான் அண்ணாச்சி, அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இன்றைய புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!