கன்னித் தன்மைக்கு ஆண்களால் மட்டுமே பாதிப்பு வரும் எனக் கூற முடியாது என நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். கன்னித்தன்மை என்பது பெரிய அளவில் பேசப்படும் ஒரு சிறிய பிரச்சினை, அந்த குறிப்பிட்ட திசு பாதிக்கப்பட பல காரணங்கள் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
கன்னித் தன்மைக்கு ஆண்களால் மட்டுமே பாதிப்பு வரும் எனக் கூற முடியாது என நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். கன்னித்தன்மை என்பது பெரிய அளவில் பேசப்படும் ஒரு சிறிய பிரச்சினை, அந்த குறிப்பிட்ட திசு பாதிக்கப்பட பல காரணங்கள் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் வாரிசு நடிகர்கள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகை லட்சுமியின் கலை வாரிசாக அவரது மகள் ஐஸ்வர்யா இருந்து வருகிறார். ஆனால் லட்சுமியை போல ஐஸ்வர்யா பெரிய நடிகையாக சோபிக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்க கூடும். 90 களில் சில படங்களில் முன்னணி கதாப்பாத்திரங்கள் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் காலப்போக்கில் படவாய்ப்புகள் இன்றி துணை நடிகையாக வலம் வரும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டார். சன் ஆப் குமரன் மகாலட்சுமி, ஆறு, ஜனா, ஹவுஸ்ஃபுல் போன்ற ஒரு சில படங்களில் சொல்லும்படி அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
undefined
ஆனால் அதற்குப் பின்னர் வாய்ப்புகள் சொல்லும் படியாக இல்லை. தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டதால் அவர் ஒரு சில சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார் ஆனால் தற்போது அந்த வாய்ப்புகளும் கிடைக்காததால் சேப்பு விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரே தனது நிலை குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ள அவர், சினிமா துறையில் உள்ள பெண்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் என்னென்னமோ எழுதுகிறார்கள், பயில்வான் ரங்கநாதன் சில நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுகிறார், அதுதான் பத்திரிக்கையாளர்களின் வேலை, அதை அவர் செய்கிறார், ஆனால் அதன் பாவ புண்ணியங்களை அவர் அனுபவித்து போகட்டும், எனது வாழ்க்கையை பொறுத்தவரையில் நான் பெரிய ஆடம்பரமான நபர் அல்ல.நான் பட்டு புடவை கூட கட்ட மாட்டேன் எளிமையாகத் தான் இருப்பேன்.
இப்போது வேலை இல்லை, பொருளாதாரம் இல்லை, ஏதாவது மெகாசீரியல் கிடைத்தால் அதை வைத்து வாழ்வேன் என கூறியுள்ளார். அப்போது அவரிடம் கன்னித்தன்மை குறித்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா, it is a big issue over a small tissue விளையாட்டு ஈடுபடும்போது அந்தத் திசு பாதிக்கப்படும், சைக்கிளிங் சென்றால் கிழிய வாய்ப்புள்ளது. ஹார்ஸ் ரைடிங் சென்றால், நடனமாடினால், சிறுமிகளாக இருக்கும் போதே விளையாட்டுகளில் ஈடுபடும் போது அது பாதிக்கப்படும். இது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை பெரிய விஷயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் இதை ஆராய்ச்சி செய்து கன்னித் தன்மை என்று பேசுபவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.