
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள பிரம்மாண்ட படம் தான் பிரம்மாஸ்திரம். இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கி உள்ளார்.
அட்வெஞ்சர் திரில்லர் கதையம்சத்துடன் தயாராகி உள்ள இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இதற்கான ஷூட்டிங் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீமை - நன்மை ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம். இதற்கு ஷிவா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்திய திரையுலகத்தில் இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் நெருப்பின் சக்தி கொண்ட இளைஞன் ரோலில் நடித்திருக்கிறார். இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். தற்போது வெளியாகவிருக்கும் பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகத்திற்கான டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவுக்கு பாட்டி வயசுல கல்யாணம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு - டாக்டரின் மன்னிப்பும்... விளக்கமும்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.