நயன்தாராவுக்கு பாட்டி வயசுல கல்யாணம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு - டாக்டரின் மன்னிப்பும்... விளக்கமும்

Published : Jun 15, 2022, 02:21 PM IST
நயன்தாராவுக்கு பாட்டி வயசுல கல்யாணம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கு - டாக்டரின் மன்னிப்பும்... விளக்கமும்

சுருக்கம்

Nayanthara : 40 வயதை நெருங்கும் நிலையில் நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொண்டதை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். 

நடிகை நயன்தாராவுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

40 வயதை நெருங்கும் நிலையில் நடிகை நயன்தாரா திருமணம் செய்துகொண்டதை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டிருந்தார். பாட்டி வயசுல கல்யாணம் என அவர் பதிவிட்டிருந்ததைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்து வந்தனர். அதேபோல் பாடகி சின்மயியும், மருத்துவரின் இந்த கமெண்ட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது அந்த மருத்துவர் மன்னிப்பு கோரி ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சக மருத்துவரும் பிரெண்டுமான அனுஷா என்பவரிடம் நான் கமெண்ட் மூலம் உரையாடியது நயன்தாரா ரசிகர்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். 

நான் அவ்வாறு கமெண்ட் செய்ததற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால் பெண்களின் கருமுட்டை 30 வயதுக்கு பின்னர் வலுவிழந்துவிடும். நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பின் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக 5 ஆண்டுகள் ஒதுக்கியதை பாராட்டி நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். 

நானும் நயன்தாராவின் ரசிகன் தான். அதனால் தான் அவரது தாமதமான திருமணம் மற்றும் குழந்தை பற்றி மிகுந்த அக்கறையுடன் பேசினேன். இந்த கமெண்ட்டை பதிவு செய்ததற்காக நயன்தாரா ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் சின்மயிக்கு ஒரு வேண்டுகோள், ஒரு கமெண்டை வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள். நான் ஒன்றும் வில்லன் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு வாட்ச்... லோகேஷுக்கு கார்... உங்களுக்கு என்ன கொடுத்தார் கமல்?- ரசிகர்களிடம் ஓப்பனாக சொன்ன அனிருத்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!