இஸ்பேடு ராஜா இயக்குநரின் புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்! பூஜையும் போட்டாச்சு...!

Published : Nov 30, 2019, 10:41 AM ISTUpdated : Nov 30, 2019, 10:42 AM IST
இஸ்பேடு ராஜா இயக்குநரின் புதிய படத்தில் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்! பூஜையும் போட்டாச்சு...!

சுருக்கம்

'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'மெல்லிசை' படம் மூலம், தமிழ் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. 

பின்னர், 'பிக்பாஸ்' புகழ் ஹரீஷ் கல்யாணை வைத்து அவர் இயக்கிய 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இவ்விரு படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ரஞ்சித் ஜெயக்கொடி, தனது அடுத்த படைப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளார். தற்காலிகமாக ’புரடக்‌ஷன் நம்பர் ஒன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.


பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையுடன் உருவாகும் இந்தப்படத்தில், 'பிக்பாஸ்' புகழ் பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்கின்றனர். ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரில்லர் கதையாக இந்தப் படம் இருக்கும் என  படக்குழு தெரிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Chatha Pacha: மலையாளத்தில் அதிரடி வெற்றி... தமிழில் களம் இறங்கும் 'சத்தா பச்சா' - டிரெய்லர் ரிலீஸ்!
Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!