
பொதுவாக பிரபலங்களை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும், அவர்களிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காலம் போய் இப்போது, செல்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது. எனவே, தங்களுக்கு பிடித்த, நடிகர் நடிகைகளை பொதுவெளியில் பார்த்தல் சற்றும் தயக்கம் இன்றி, தங்களுடைய மொபைல் போனில் போட்டோ எடுக்க முற்படுகின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான், நியூயார்க் நாட்டிற்கு சென்று விட்டு, மும்பை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரை கண்ட ரசிகர்கள், அடுக்கடுக்காக ஒருவர் பின் ஒருவர் வந்து அவருடன் போட்டோ எடுத்து கொள்ள அனுமதி கேட்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சாராவும் சற்றும் தயக்கம் இன்றி, அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஒரு ரசிகர் அவரின் இடுப்பில் கை வைத்து, புகைப்படம் எடுக்க முயன்றார்.
ஷாக் அடித்த மாதிரி உடனடியாக அந்த ரசிகரிடம் இருந்து விலகிய சாரா, இதனை முகத்தில் காட்டி கொள்ளாமல் மீண்டும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார். மீண்டும் அந்த ரசிகர் தன் மீது கை வைத்து விடுவாரோ என்று பயந்து ஒரு ஜெர்க் கொடுத்தார் சாரா.
பின், சில ரசிகர்கள் தொடர்ந்து புகைப்படம் எடுக்க வந்தும், அவர்களை தவிர்த்து விட்டு அந்த இடத்தில் இருந்து சாரா ஓட்டம் பிடித்துள்ள, வீடியோ இப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.