பெண்கள் பற்றி இப்படியா பேசுவீங்க... வந்து விளக்கம் சொல்லுங்க... பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

By Asianet TamilFirst Published Nov 30, 2019, 8:59 AM IST
Highlights

 "பொதுவாக ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில்  ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்குக்கூட ஆண்களை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுக்கு இடம் கொடுத்தது பெண்கள்தான். உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அதை வைத்து எங்கேயெ கொண்டுபோய்விட்டார்கள். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெண்கள் செய்ததும் தவறுதான்” என்று பாக்யராஜ் பேசினார். 

பட விழாவில் பெண்கள் பற்றி சர்ச்சையாகப் பேசிய நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் விளக்கம் அளிக்கக் கோரி தமிழக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
'கருத்துகளை பதிவுசெய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினகராக இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் பேசும் போது "ஆண்கள் சின்ன வீடு வைத்திருந்தாலும் பெரிய வீட்டுக்கும் எந்த இடைஞ்சலும் செய்ய மாட்டார்கள். ஆனால், பெண்கள் கள்ளக் காதலில் இருந்தால், கணவர் கொலை, குழந்தை கொலை என்று செய்திகள் வருகின்றன.
பொதுவாக ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது . அது உண்மைதான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில்  ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்குக்கூட ஆண்களை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுக்கு இடம் கொடுத்தது பெண்கள்தான். உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அதை வைத்து எங்கேயெ கொண்டுபோய்விட்டார்கள். இதில் ஆண்கள் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த பெண்கள் செய்ததும் தவறுதான்” என்று பாக்யராஜ் பேசினார். 
பாக்யராஜின் இந்தப் பேச்சு சர்ச்சையாக உருவெடுத்தது. பாக்யராஜினி இந்தப் பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில், ‘பெண்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் காயப்படுத்தும் விதமாக பாக்யராஜின் பேச்சு உள்ளது. இந்த விஷயத்தை சட்டரீதியாகக் கொண்டுசென்று, பாக்யராஜுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நடிகரும் இயக்குநருமான பாக்யராஜுக்கு தமிழக மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ளமகளிர் ஆணையத்தில் டிசம்பர் 2 அன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!