
நடிகர் அஜித் எந்த ஒரு நடிப்புப்பின்னணியும் இல்லாமல் மிகவும் போராடி தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட நாயகன். இவர் சினிமாவிற்கு வரப் போராடியதால் என்னவோ நடிப்பில் சாதிக்கத் துடிக்கும் பலருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இவர் வளர்ந்து வரும் நேரத்தில் நடித்த திரைப்படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' இந்தப் படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தவர் அஜித்தானாம். ஆனால் ஐஸ்வர்யா ராய் வளர்ந்து வரும் நடிகர்களுடன் தன்னால் நடிக்க முடியாது என அஜித்தை கேவலப்படுத்துவது போல் நடந்துகொண்டுள்ளார்.
இவர் அஜித் மீது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபமாகப் பேசுவதை ஒரு முறை பார்த்த மம்முட்டி அஜித்துக்கு ஆதரவாக இயக்குனரிடமும் பேசியுள்ளாராம் . மேலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மரியாதை கொடுத்து நடத்த வேண்டும் என ஐஸ்வர்யா ராய்க்கு அறிவுரையும் கொடுத்தாராம்.
இவர் அஜித்துடன் நடிக்க மறுத்ததால் கதையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி, பின் அப்பாஸ் இந்தப் படத்தில் நடித்தாராம். இந்தப் படம் தோல்வியைத் தழுவியபோது ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராய்காக கதையில் ஏற்படுத்திய மற்றம் தான் காரணம் என இயக்குனர் ராஜு மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தமிழ்ப் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஐஸ்வர்யா ராய் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தார் அஜித்.
மேலும் அஜித் நடித்த பில்லா படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் இவரிடம் பேசி கால்ஷீட் வாங்கப்பட்டதாம். ஆனால் அஜித் முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவராலும் சகஜமாக நடிக்க முடியாது என இயக்குனரிடம் எடுத்துக் கூறியதால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்குச் சென்றதாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.