
இயக்குநர் பாலாவின் கையில் கிடைத்தால் டம்மி பீஸ் கூட டக்கராய் நடிக்கும். இந்த நிலையில் சூப்பர் ஆர்டிஸ்ட் ஜோதிகா, பாலாவின் கதை நாயகியானால் அல்லு தெறிக்காதா?! தெறித்திருக்கிறது. ஆனால் அல்லு மட்டும் தெறிக்கவில்லை, அப்படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு சிவக்குமார் அதிர்ந்திருப்பதால் ஜோவின் கணவர் சூர்யாவும் தெறித்திருக்கிறார் சங்கடத்தில்.
பாலாவின் B-ஸ்டியோஸ் தயாரிக்கும் அடுத்த படம் ‘நாச்சியார்’. கதையின் நாயகியாக ஜோதிகா, இதுவரை செய்திராத கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் என்று கவனம் ஈர்க்கும் ஆளுமைகள் இதில் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இதன் டீசர் பெரும் விவாத பொருளாகியிருக்கிறது.
பாலாவின் வழக்கமான கிளிஷேக்கல் இந்த பட டீசரிலும் விரவிக் கிடக்கின்றன. ஜோதிகா இரண்டு முகங்களாய் தெரிகிறார். இன்னொசெண்ட் கேரக்டரிலும், அதிரடி போலீஸ் ஆபீஸருமாக தூள் பண்ணியிருக்கிறார்.
பிதாமகன் விக்ரம், அவன் இவன் ஆர்யா, நான்கடவுள் ஆர்யா, பரதேசி அதர்வா போல் ஜி.வி.பிரகாஷும் இந்த படத்தில் செம்பட்டை கலர் தலைமுடியுடன் அழுக்குப் பையனாக திரிகிறார். பாலாவின் கதைகளில் தப்பாத போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும், ரத்தங்களுமாய் வழக்கமான ரூட்டில் பயணிக்கிறது டீசர்.
ஆனால் டீசரின் இறுதியில் செம ஷாக் வைத்திருக்கிறார் பாலா. டீசரில் எங்குமே கேரக்டர் பேசுவதில்லை, இளையராஜாவின் உயிரறுக்கும் இசைதான் கதறலும், தென்றலுமாக நிரம்பி வழிகிறது. ஆனால் கடைசி நொடிகளில் மட்டும் ஜோதிகா பேசும் ஒற்றை டயலாக் வருகிறது. அது ‘தே...பயலுக’ என்று பீப்-க்கு உள்ளாகும் ஒரு வார்த்தையை சொல்லிச் செல்கிறார்.
இது ஒரு புறமிருக்க நாச்சியார் படத்தின் டீசரை பார்த்துவிட்டு ஜோவின் மாமனார் நடிகர் சிவக்குமார் அதிர்ந்துவிட்டாராம். ‘என்னப்பா இந்த மாதிரியான டயலாக்கெல்லாம்! ரெண்டு குழந்தைங்களுகு அம்மாவான பின்னாடியும் நடிக்கப்போனதில் தப்பேயில்ல. ஆனால் 36 வயதினிலே, மகளிர் மட்டும் அப்படின்னு பாசிடீவ் கதைகருக்கள், பெண்களை தூக்கி கொண்டாடுற படங்களா இருந்தா ஓ.கே. ஆனா போலீஸு அதுவும் கெட்டவார்த்த பேசுற போலீஸ் படமா இருக்குதே! ஏம்ம்ம்மாஆஆஆஆஆ இப்படி என்று புலம்பினாராம். பாலா படம், அவரே ஜோவை செலக்ட் செய்திருக்கிறார் என்பதால் மறுக்காமல் தலையாட்டிய சூர்யா இப்போது இந்த சங்கடமான சூழ்நிலையால் தவித்து தெறிக்கிறாராம்.
இணையதளத்தில் ஜோவின் இந்த வார்த்தை பிரயோகத்துக்கு பாராட்டும், விமர்சனமுமாக ரியாக்ஷன்கள் வந்து விழுந்திருக்கின்றன. அதில் ‘டேய்! ஜோ என்ன சொல்றார்? தன்னோட ரெண்டு குழந்தைகளான தேவ், தியான்னு அவங்க பேரை சொல்றாங்க. இதுக்கு ஏண்டா காண்டாவுறீங்க?’ என்று கேட்டுவைத்து நூற்றுக்கணக்கில் லைக்ஸ் வாங்கி குவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.