
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பலருக்கு பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் கூட, நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு தன்னுடைய சார்பில் 10 லட்சம் பணம் வழங்கியது மட்டும் இன்றி, மளிகை பொருள்களையும் வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் இன்று, இவருடைய தந்தை தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரிவேலனின் 33 ஆம் ஆனது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தன்னுடைய தந்தையின் ஒவ்வொரு நினைவு தினத்தின் போதும், திரையுலகில் உள்ள நலிந்த நாடக கலைஞர்கள் அனைவருக்கும், அறுசுவை உணவளித்து அவர்களுக்கு உடைகள் எடுத்து தருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் இந்த ஆண்டு, கொரோனா பிரச்சனையின் கோர தாண்டவத்தால், வருடம் தோறும் தான் செய்து வந்ததை செய்ய முடியாமல் போனது. எனவே 25000 நாடக கலைஞர்கள் வங்கி கணக்கிற்கு ரூபாய் 1000 வீதம் பணம் செலுத்தி உள்ளார்.
வழக்கு போல் தான் நாடக நடிகர்களுக்கு செய்து வரும் மரியாதையை செய்யமுடியாமல் போனதே என விட்டு விடாமல் இவர் தற்போது செய்துள்ள செயலுக்கு பலர் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.