
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது தான் பாரதியும், கண்ணம்மாவும் இணையப்போவது போல் மகிழ்ச்சியான காட்சிகள் எல்லாம் இடம் பெற்று வந்தன.
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகி இளம் நடிகர் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் பாரதிக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வரும், அகிலனுக்கு பாரதியை காட்டிலும் பெண் ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர். அகிலனுக்கு சின்னத்திரையை விட வெள்ளித்திரை மீது தான் ஆசை அதிகமாம். தற்போது
இந்நிலையில் தற்போது அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கான சரியான கால்ஷீட்டை கொடுக்க இயலவில்லையாம், அதனால் தான் சீரியலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
நடிகர் பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்து வரும் அகிலன், தற்போது பீட்சா 3, விஷாலுடன் இணைந்து ஒரு படம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் இரண்டு படங்கள் என நான்கு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.