
இந்தியாவின் பணக்கார தொழிலதிபரான முகேஷ் அம்பானி, தனது மகன் ஆனந்தின் ப்ரீ வெட்டிங் நிகழ்வை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மிக பிரம்மாண்டமாக நடத்தினார். குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மூன்று நாட்கள் நடந்த இந்த திருமண விழாவில் கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை எக்கச்சக்கமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பிரபலங்கள் மேடையில் உற்சாக நடனமாடிய வீடியோக்களும் வெளியாகி வைரலானது.
அந்த வகையில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் ஒன்றாக நடனமாடினர். அவர் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகர் ராம்சரண் உடன் சேர்ந்து நடனமாடிய வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் முன்னர் நடிகர் ராம்சரணை பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் அவமானப்படுத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Goundamani Networth: 84 வயதிலும் ஹீரோவாக நடிக்கும்.. காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாட ராம்சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான், அவரை பெயர் சொல்லி அழைக்காமல், இட்லி வடை என கிண்டலடிக்கும் விதமாக மேடையில் இருந்து அழைத்தார். அவரின் இந்த செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பூதாகராமாக வெடித்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் இந்த செயல் நடிகர் ராம்சரணை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என ராம்சரண் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ராம்சரணின் ஒப்பனைக் கலைஞரான ஜெப ஹாசன், ஷாருக்கான் நடிகர் ராம்சரணை, இட்லி, வடை, சாம்பார் என அழைத்தது தனக்கு சுத்தமாக பிடிக்காததால், அவர் அப்படி சொன்னதும் தான் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிவிட்டேன் என ஆதங்கத்துடன் கூறி இருக்கிறார். ஷாருக்கானுக்கு எதிர்ப்புகள் ஒருபுறம் கிளம்பினாலும், மறுபுறம் ஷாருக்கான் அதை ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே சொன்னதாக ஆதரவுக் குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 45 வயதிலும் ஜோ இளமையாக தெரிய இதுதான் காரணமா?... ஜோதிகாவின் வெறித்தனமான ஒர்க் அவுட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.