
Muruga Paktharkal Manadu : மதுரை பாண்டிகோவிலில் அமைந்துள்ள அம்மா திடலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்காக அறுபடை வீடுகள் போல் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரம்மாண்ட அரங்கை காண அங்கு மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வருவபவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக இதில் கலந்துகொள்ள வரும் வாகனங்கள் கட்டாயம் பாஸ் பெற வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்திருந்தது.
இதையடுத்து இந்த நிபந்தனையை எதிர்த்து இந்து முன்னணியை சேர்ந்தவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் பாஸ் பெற வேண்டும் என்கிற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பதிவுச் சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி அவர்கள் பதிவு செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுமாம். இந்த மாநாட்டில் ஏராளாமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. இதுதவிர உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளாராம். இதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுபற்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் ஜூன் 22ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது . தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை என்று ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.