மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் 'மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்' ஆலோசனையா?

By manimegalai aFirst Published Jul 12, 2021, 10:44 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடித்தி வரும் நிலையில், மீண்டும் அரசியலில் கவனம் செலுத்துவது குறித்து, நிவாகிகளுடன் ஆலோசித்த பின் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடித்தி வரும் நிலையில், மீண்டும் அரசியலில் கவனம் செலுத்துவது குறித்து, நிவாகிகளுடன் ஆலோசித்த பின் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற பின் ஜூலை 9 ஆம் தேதி சென்னை திரும்பினார். தற்போது முதல் வேலையாக இன்று தன்னுடைய மக்கள் மன்ற நிவாகிகளுடன் ரஜினிகாந்த் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இதற்கான பேச்சு வார்த்தை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

இதில் மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து 'மக்கள் மன்ற நிர்வாகிகளுடன்' ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, அதிகார பூர்வமாக தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் கால் பதிப்பார் என ரசிகர்கள் முதல் ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்த நிலையில், அனைவரது ஆசையையும் பொய் ஆக்குவது போல் தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வர வில்லை என அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனைக்கு பின் தெரிவிக்கப்படும் என கூறியுள்ளது, தலைவர் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும் என போராட்டம் வரை சென்ற ரசிகர்கள் நெஞ்சங்களை மகிழ்விப்பது போல் அமைந்துள்ளது.

அதே நேரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், அடுத்தடுத்து மற்ற காட்சிகளில் தங்களை இணைந்து கொண்டு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாவட்ட நிவாகிகள், மற்றும் மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!