அடடா அப்டேட் மழையா இருக்கே... ‘வலிமை’ ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 11, 2021, 07:40 PM ISTUpdated : Jul 11, 2021, 07:50 PM IST
அடடா அப்டேட் மழையா இருக்கே... ‘வலிமை’ ரிலீஸ் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...!

சுருக்கம்

காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தயாரிப்பாளர் போனிகபூர் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

உலகம் முழுவதும் உள்ள தல அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பான வலிமை திரைப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் BayView Projects மற்றும்  Zee Studios இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில்  ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, புகழ் மற்றும் யோகி பாபு உடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

2019ம் ஆண்டு படத்திற்கு பூஜை போட்டதிலிருந்தே தல ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் இரண்டு முறை வீசிய கொரோனா அலையால் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனை எல்லாம் ஈடுகட்டும் விதமாக இன்று மாலை வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். 

எங்கே எதிர்பார்ப்பு பொய்யாகிவிடுமோ? என்ற அச்சத்தின் உச்சத்தில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தயாரிப்பாளர் போனிகபூர் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த உற்சாகத்தில் தல ரசிகர்கள் திளைப்பதற்குள், அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தின் ஷூட்டிங் முழுதாக முடிக்கப்பட்டுவிட்டதாகவும்,  இந்த ஆண்டு இறுதியில் "வலிமை" திரைப்படம்  உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  குறிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துவிட்டது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!