பீஸ்ட் சாதனையை முறியடித்ததாக பந்தா காட்டிய KGF 2 - ராக்கி பாயின் போங்கு வேலைகளை போட்டுடைத்த தளபதி ரசிகர்கள்

By Asianet Tamil cinema  |  First Published Mar 23, 2022, 5:49 AM IST

Beast vs KGF 2 : யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் டூஃபான் என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. 


அரபிக் குத்து சாதனை

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக் குத்து பாடல் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. வெளியானது முதலே பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட் அடித்த இப்பாடல், பல்வேறு சாதனைகளை படைத்தது. அந்த வகையில் வெளியான ஒரே நாளில் அதிக பார்வைகளைப் பெற்ற லிரிக்கல் வீடியோ என்கிற சாதனையை தன் வசப்படுத்தியது அரபிக் குத்து. இப்பாடல் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் டூஃபான் என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட்டனர். 

கே.ஜி.எஃப் 2 பீட் செய்ததா?

கேட்கும் ரகத்தில் இருந்த இப்பாடல் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து ஒரே நாளில் அதிக பார்வைகளை பெற்ற பாடல் என்கிற சாதனையை படைத்துள்ளதாக கே.ஜி.எஃப் படக்குழு அறிவித்தது. இப்பாடல் 26 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள், கே.ஜி.எஃப் 2 படக்குழுவின் பித்தலாட்ட வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர். அப்பாடல் வெளியிடப்பட்ட 5 மொழிகளிலும் சேர்த்து 26 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளதாம். அரபிக் குத்து பாடல் ஒன்று மட்டுமே 25 மில்லியன் பார்வைகளை பெற்றது. அது எப்படி சாதனை ஆகும் என தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... KGF 2 : நீங்க அவன் குறுக்க போயிடாதீங்க சார்... பாடல் மூலம் விஜய்க்கு வார்னிங் கொடுக்கிறதா KGF 2 படக்குழு?

click me!