மிரட்டல் விடுத்து... வீட்டை இடித்து... கங்கணாவை உள்ளே தூக்கிப்போட கடைசியில் இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டா?

By Thiraviaraj RMFirst Published Sep 12, 2020, 3:57 PM IST
Highlights

தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ட பிறகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோபம் வரவில்லையா என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ட பிறகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோபம் வரவில்லையா என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்த நிலையில் கங்கனா ரனாவத் போதை மருந்து உட்கொண்டாரா என்பது குறித்து விசாரிக்குமாறு மகாராஷ்டிர காவல்துறைக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரனாவத் வீட்டில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கங்கனா ரனாவத் போதை மருந்தை எடுத்துக் கொண்டதாக அவரது நண்பர் அதையவன் சுமன் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்த நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையில் மும்பையில் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ட பிறகும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோபம் வரவில்லையா என்றும் இந்த விவகாரத்தில் அவர் அமைதி காப்பது ஏன் என்றும் கங்கணா டிவிட்டரில் வினவியுள்ளார். சோனியாவின் மௌனத்தை வரலாறு மதிப்பிடும் என்றும் கங்கனா கூறியுள்ளார்.

இந்த சூழலில் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங்கை சந்தித்த மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வீடு இடிக்கப்பட்ட விவகாரத்தில் கங்கணாவுக்கு நீதி பெற்றுத் தருவதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை மாறிவிட்டதாக கங்கணா இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த பதிவை தொடர்ந்து மும்பை வந்து பார் என்ற ரீதியில் சிவசேனா கட்சியினர் எச்சரித்த நிலையில் கங்கனா மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றார். அவர் மும்பை சென்று கொண்டிருக்கையில் அவரது வீடு விதிமீறி கட்டப்பட்ட தாக கூறி கட்டடத்தின் ஒரு பகுதியை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.

click me!