சீய் சீய் என்ன டீசர்யா இது.......எல்லாம் 18+....ஒரே நாளில் அதிகம் பார்வையாளர்கள் பெற்ற இருட்டு அறையில் முரட்டு குத்து...

First Published Feb 12, 2018, 11:40 AM IST
Highlights
iruttuaraiyilmurattukuthu teaser review


ஹாரா ஹாரா மஹாதேவகி

இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'ஹரஹர மஹாதேவகி'.அடல்ட் காமெடியாக உருவான இப்படம் நல்ல ஹிட் ஆனது.இப்படத்தில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் உள்பட பலர் நடித்திருந்தனர்.

18+

இந்நிலையில் மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்த்திருக்கிறார்.
படம் பெயர் இருட்டு அறையில் முரட்டு குத்து.என்ன? படம் பெயரே விவகாரமாக இருக்கிறதா? ஆம். இந்த படம் 18+ பார்க்க வேண்டிய படம் தான். இந்த படத்தில் கௌதம் கார்த்திக்,வைபவி சாண்டில்யா, மொட்டை ராஜேந்திரன்,கருணாகரன், ஜாங்கிரி மதுமிதா என பலர் நடித்திருக்கிறார்கள்.

ப்ளூ சட்டை

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் பிரபலமான 'ப்ளூ சட்டை' கதை சொல்வது போல அமைந்திருக்கிறது. இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பென்னட் சில்வர்மேன் இயக்கிய 'ஹேண்ட் ஜாப் கேபின்' என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று விமர்சனம் செய்தனர்.

1.5மில்லியன்

இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் சந்தோஷ் அதை மறுத்துள்ளார். எது எப்படியோ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீசரை இணையத்தளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 32 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. 

click me!