விஜய் மீதான அபராததிற்கு இடைகால..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி..!

By manimegalai aFirst Published Jul 27, 2021, 12:43 PM IST
Highlights

நடிகர் விஜய் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்த  நிலையில், விஜய் மீதான அபராததிற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 

நடிகர் விஜய் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்த  நிலையில், விஜய் மீதான அபராததிற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து விஜய் தரப்பில் இருந்து உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில் வரிக்கு எதிராக இந்த வழக்கை தொடரவில்லை என்றும், நீதிபதி எஸ் .எம்.சுப்பிரமணி கூறிய கருத்துக்கு எதிராகத்தான் வழக்கு தொடரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

விஜய் தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர், விஜய் நாராயணன் ஆஜராகி வாதிட்டார். அவரது தரப்பில் இருந்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், இது போல் ஏற்கனவே சில முக்கிய பிரமுகர்கள் வரி விளக்கு கேட்டு வழக்கு தொடர்த்துள்ளதாகவும் அவரது விவாதத்தில் முன் வைக்கப்பட்டது. அதே நேரத்தில் விஜய் வரி செலுத்த தயாராகி இருப்பதாகவும், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி கூறிய தேவையில்லாத கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும், அபராததையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மேலும் இது போன்று தனி நபர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க  கூடாது என்பதையும் விஜய் தரப்பில் இருந்து வாதாடிய வழக்கறிஞர் விஜய் நாராயணன் சுட்டி காட்டினார்.  ஏற்கனவே 20 சதவீத வரியை கட்டிவிட்டதன் காரணமாகவும், மீதமுள்ள தொகையையும் ஒரே வாரத்தில் கட்ட தயாராக இருப்பதாகவும், அதற்கான சலானை வரி துறை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஜய் மீதான அபராததிற்கு இடைக்கால தடை விதித்துள்ளார். மேலும் விஜய்யிடம் இருந்து மீதம் நுழைவு வரியை வசூலிக்க அவருக்கு அதற்கான சலான் வழங்கும்படியும் வரி துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 


 

click me!