கீரவாணியுடன் அனிரூத்... வேற லெவல் போஸ்டருடன் வெளியான 'RRR ' படத்தின் அடுத்த அசத்தல் அப்டேட்..!

Published : Jul 27, 2021, 12:03 PM IST
கீரவாணியுடன் அனிரூத்... வேற லெவல் போஸ்டருடன் வெளியான 'RRR ' படத்தின் அடுத்த அசத்தல் அப்டேட்..!

சுருக்கம்

ராஜமௌலி இயக்கும் 'RRR ' திரைப்படம் கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின், முதல் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்கிற தேதியை அதிகார பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.  

ராஜமௌலி இயக்கும் 'RRR ' திரைப்படம் கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின், முதல் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்கிற தேதியை அதிகார பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

பாகுபலி என்கிற பிரமாண்ட படத்தை கொடுத்த இயக்குனர், எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ளது 'RRR ' திரைப்படம். சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ இந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், தற்போது... முதல் சிங்கிள் பாடல் வெளியீடு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில், கதாநாயகர்களாக தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு, 'RRR ' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலை வெளியிட உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில் நட்பு என்கிற வார்த்தையும் இடம்பெற்றுள்ளதால், நண்பர்களின் நட்பை மையமாக வைத்து இந்த பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போஸ்டரில் கீரவாணியுடன் பல அனிருத், விஜய் ஏசுதாஸ் உள்ளிட்ட 5 பிரபலங்கள் அமர்ந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு