
நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு காசோலை வடிவில் அழைப்பிதழ் அச்சடித்து பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த காசோலை அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த், தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினியின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூருவில் வித்தியாசமான அழைப்பிதழ் அச்சிடப்பட்டு கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்நேகா ஜீவி ரஜினிகாந்த் சேவா சங்கம் (ஆர்) என்ற அமைப்பு சார்பில் ரஜினியின் பிறந்த நாள் விழா பெங்களூரு ராகிகுட்டாவில் உள்ள கண்பார்வையற்றோர் பள்ளியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழ், காசோலை வடிவத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அழைப்பிதழில் தொகை எழுதும் பகுதியில் ரஜினிகாந்தின் வயதைக் குறிக்கும் வகையில் 67 என்று எழுதப்பட்டுள்ளது.
தேதி குறிப்பிடும் பகுதியில் ரஜினியின் பிறந்த தினம், மாதம், வருடம் ஆகியவை எண்களில் குறிப்படப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண் கட்டத்தில் ரஜினிகாந்தின் பிறந்த தினம் இடம் பெற்றுள்ளது.
இந்த வித்தியாசமான அழைப்பிதழ் அச்சடித்து, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்த காசோலை அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.