
உலக அளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்திவரும் 'பாகுபலி 2', அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான டாம் ஹாங்க்ஸ், எம்மா வாட்சன் நடித்திருக்கும் ''தி சர்க்கிள்'' படத்தை விட பாகுபலி 2 அதிகமாக வசூலித்துள்ளது.
கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம், இந்தியாவில், திரையிட்ட அனைத்து மொழிகளிலும் முந்தைய படங்களின் வசூலை அடித்து நொறுக்கு முன்னணியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலும் கடந்த வாரம் வெளியான 'பாகுபலி 2', மற்ற ஆங்கிலப் படங்களுடன் போட்டியிட்டு, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 3ஆம் இடத்தில உள்ளது.
இந்நிலையில், ஹாலிவுட் படமான 'தி சர்க்கிள்' படத்தை விட, பாகுபலி 2 அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. வெறும் 425 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியிருக்கும் 'பாகுபலி 2' முதல் 3 நாட்களில் 10 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. அதாவது ஒரு திரையங்கத்தில் சராசரியாக 23 ஆயிரம் மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வசூல்.
அதேபோல, 3,163 திரையரங்குகளில் வெளியான தி சர்க்கிள் திரைப்படம், வெறும் 9.3 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது என்று அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் 'பாக்ஸ் ஆபிஸ் மோஜோ' என்ற இணையதளம் உறுதி படுத்தியுள்ளது.
வார இறுதி நாட்கள் வசூலையும் தாண்டி, திங்கள், செவ்வாய் என தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்த்த வண்ணம் உள்ளது 'பாகுபலி 2'.
அமெரிக்காவில் இதுவரை வெளியான இந்திய சினிமாக்களின் வசூல் சாதனைகளையெல்லாம் 'பாகுபலி 2' சாப்பிட்டுவிட்டதாம். இதற்கு முன் அமெரிக்காவில் வெளியான 'டங்கல்' அதிகம் வசூலித்தது. ஆனால் அதன் மொத்த ஓட்டத்தின் வசூல் 12.4 மில்லியன் டாலர்கள். தற்போது, பாகுபலி 2, வெளியான 6 நாட்களிலேயே 12.6 மில்லியன் டாலர்களை வசூலித்து முந்தைய சாதனையை உடைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.