
பிரபல டிவி சீரியல் புகழ் நடிகையான ரேகா குமார் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் இறந்து விட்டதாக காலை முதல் தீயாய் பரவிய செய்தி தமிழக இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
இன்று காலை வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே பெங்களுரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் கன்னட திரைப்பட துணை நடிகை ரேகா சிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நடிகை ரேகா என்றவுடனே தற்போது சன்டிவியில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் தெய்வ மகள் சீரியலில் வில்லியாக நடித்து வரும் ரேகா குமார் தான் என அப்பகுதி நிருபர்கள் சிலர் தவறாக வாட்ஸ்அப்களில் பதிவிட்டு விட்டனர்.
அதை பார்த்த பல இல்லத்தரசிகள் சீரியல், விரும்பிகள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
காரணம் தற்போதெல்லாம் இரவு 8 மணி ஆனாலே சிறுவர் முதல் பெரியவர் வரை தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் காயு டார்லிங் எனும் கேரக்டர் செய்யும் அழிச்சாட்டியங்களை பார்க்காமல் தூங்குவதில்லை.
அந்தளவுக்கு ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் நேயர்களிடையே ஒன்றி போயுள்ளது.
காயு டார்லிங்காக நடிக்கும் ரேகா குமாரும் கர்நாடகாவை சேர்ந்தவர், திரைத்துறையை சேர்ந்தவர், ஒத்த பெயர் உடையவர் என்பதால் ரேகா குமார் தான் இறந்து விட்டதாக தவறான தகவல் பரவியது.
தான் இறந்து விட்டதாக வந்த செய்தியை கேட்ட ரேகா குமார் அப்போது பெங்களூர் மல்லேஸ்வரத்தில் ஒரு கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தாராம்.
இந்த தகவல் அறிந்ததும் உடனடியாக அவர் தனது செல்போனை எடுத்து தான் நலமாக பெங்களூரில் இருப்பதாகவும் விபத்தில் இறந்தது ரேகா என்ற துணை நடிகை ஆவார் என விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.