ஆள விடுங்கப்பா.. இந்தியன் 2 விவகாரத்தில் இருந்து கழண்டு கொண்ட இயக்குனர்..என்ன காரணம் தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 16, 2022, 04:42 PM IST
ஆள விடுங்கப்பா.. இந்தியன் 2 விவகாரத்தில் இருந்து கழண்டு கொண்ட இயக்குனர்..என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 விவகாரத்தை கவனிக்க வேறொருவரை நியமித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தியன் 2 பட  பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம்  தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இதற்கிடையே  ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். தற்போது தெலுங்கில் ராம்சரணை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியன்2 விவகாரத்தை கவனிக்க தற்போது புதிய நபரை நியமித்து உள்ளாராம். ‘இனி இந்தியன்2 தொடர்பாக எந்த விவகாரம் வந்தாலும் நீங்களே சமாளித்து கொள்ளுங்கள்’ என அவரிடம் கூறியுள்ளாராம். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்’ என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்