
பிரபல தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டி, பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை திருமணம் செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே மற்றும் அஷ்ரிதா இருவரும் கடந்த சில வருடங்களாவே, மிகவும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களுடைய காத்தல் திருமணத்தில் முடிவடைய உள்ளது.
மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இவர்களுடைய திருமணம் டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.
நடிகை அஷ்ரிதா ஷெட்டி, உதயம் NH4 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இந்திரஜித், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர்களுடைய திருமணம் மும்பையில் நடக்க காரணம் மனிஷ் பாண்டே அடுத்ததாக விளையாடவுள்ள கரீபியன் தீவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி, மும்பையில் நடைபெற உள்ளதாகவும், எனவே திருமணத்தையும் மும்பையிலேயே அ நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
எனவே இவர்களுடைய திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.