
500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு 8 மணிக்கு மோடி அறிவித்தவுடன் கதிகலங்கி போய்விட்டனர் இந்தியாவின் கறுப்பு பண முதலைகள்.
குறிப்பாக, கறுப்புப்பணம் அதிகம் புழங்கக்கூடிய திரைப்படத்துறையினர் ஆடித்தான்போய்விட்டனர். காரணம், சினிமா தயாரிப்பாளர்கள் பெரும்பாலும், கணக்கு காண்பித்த பணத்தில் படம் எடுத்தால் வரி கட்டியே காணாமல் போய்விடுவர்.
அதனால், அதிக அளவில் வரிஏய்ப்பு செய்யப்படும் துறையாக மாறிவிட்டது சினிமாதுறை. முறைப்படுத்தப்படாத இந்த தொழிலில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது என மத்திய அரசு உறுதியாக நம்புகிறது.
மத்திய அரசின் சமீபத்திய ரூபாய் நோட்டு அதிரடியின் அடுத்தகட்டமாக வருமான வரித்துறையினர் கோதாவில் குதித்துவிட்டனர்.
வணிக நிறுவனங்களை தொடர்ந்து திரைத்துறையினரையும் விட்டுவைக்கவில்லை வருமான வரித்துறையினர்.
சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு உலகின் பார்வையை திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட சினிமா படமான பாகுபலி தயாரிப்பாளர் வீட்டிலும் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பல பிரபலங்கள் நடித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனதோடு சினிமா துறையில் வரலாறு காணாத வசூலை அள்ளிக்குவித்தது.
பாகுபலி பார்ட்- 1 படத்தின் ஒட்டு மொத்த வசூல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி உரிமம் மற்றும் வெளிநாட்டு விற்பனை ஆகியவையெல்லாம் சேர்த்து 1000கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், கருப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 500, 1000 தடையை தொடர்ந்து பாகுபலி தயாரிப்பாளர் வீட்டிலும் இன்று ரெய்டு நடத்தப்பட்டது.
மொத்தம் 3 பேர் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சோபு யார்லங்ட்டா, பிரசாத் தேவினேனி ஆகியோரது வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
திரைத்துறையினரின் வீடுகளில் மத்திய அரசு சோதனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.