கோவையில் நடந்த ஃபேஷன் ஷோ... 'பொன்னியின் செல்வன்' காட்சிகள் வரைந்த வித்தியாசமான உடையில் கலக்கிய பெண்!

Published : Mar 13, 2023, 10:31 PM IST
கோவையில் நடந்த ஃபேஷன் ஷோ... 'பொன்னியின் செல்வன்' காட்சிகள் வரைந்த வித்தியாசமான உடையில் கலக்கிய பெண்!

சுருக்கம்

கோவையில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முழு படத்தின் காட்சிகளை ஓவியங்களாக உருவாக்கிய வித்தியாசமான ஆடை அணிந்து இளம் பெண் ஒருவர் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  

பெண்கள் சுய முன்னேற்றம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை கோவையை சேர்ந்த சுகுணா சண்முகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண்கள் மட்டும் டிசைன் செய்த ஆடை அலங்கார அணி வகுப்பு கோவையில் நடைபெற்றது. மகளிர் தினத்தை போற்றும் வகையில் நடைபெற்ற யாதுமாகி நிற்பவள் என நடைபெற்ற இதில் பட்டாம்பூச்சி, ஜொலிக்க்கும் மின் விளக்கு, சிண்ட்டெரெல்லா என பல்வேறு டிசைன்களில் ஆடைகள் அணிந்த பெண்கள் ஒய்யார நடை நடந்து அசத்தி வந்தனர்.

இந்நிலையில் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் திரைப்பட காட்சிகளை தத்ரூபமான ஓவியங்களால்  வரைந்து உருவாக்கிய ஆடை அணிந்து வந்த பெண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

அம்மாடியோவ்...ஒரு ஆஸ்கர் விருதுக்கு இத்தனை கோடி செலவு செய்தாரா ராஜமௌலி? ஷாக்கிங் தகவல்.!

தமிழர்களின் வீரம் மற்றும் கலைகளை போற்றும் விதமாக அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின்  காட்சிகளை ஆரம்பம் முதல்,  கடைசி வரை தத்ரூபமான ஓவியத்தின் மூலம் ஆடையில் உருவாக்கிய ஆடை வடிவைப்பாளர் கூறுகையில், தமிழ் பாரம்பரியம் போற்றும் வகையில் பொன்னி நதி, மற்றும் பல ஓவியங்களை இயற்கையான பொருட்களை கொண்டு வரைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொன்னியின் செல்வன், நாவல் மற்றும் திரைப்பட காட்சிகளை தத்ருபமாக கண்முன் காட்டும் ஓவியம் கொண்ட இந்த ஆடை அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கிழித்த மாடர்ன் பேன்டில் அஜித் மகள் அனோஷ்கா! AK62 பட கெட்டப்பில் குடும்பத்துடன் எடுத்த சீக்ரெட் போட்டோஸ்!

இதன் மூலம் பண்டை கால மன்னர்கள் மற்றும், நம் மக்களை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள் என்பது தெரிகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது படம் வெளியாக இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!