இலியானாவை ஆட வைக்க நினைத்த தயாரிப்பாளர்! அவரையே ஆட்டம் காண வைத்த சம்பளம்?

Published : Nov 25, 2018, 07:22 PM IST
இலியானாவை ஆட வைக்க நினைத்த தயாரிப்பாளர்! அவரையே ஆட்டம் காண வைத்த சம்பளம்?

சுருக்கம்

ஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

ஒல்லி பெல்லி இடுப்பில் பல ரசிகர்கள் மனதை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில், 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தினார். பின் நடிகர் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தின் நடித்தார். இந்த படத்திற்கு பின் இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது.

பாலிவுட் திரையுலகத்தில் தற்போது கவனம் செலுத்தி வரும் இவர், தன்னுடைய உடல் எடையை அதிகரித்து காணப்படுகிறார். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் எனக்கு பிடிப்பதால் நான் இப்படி இருக்கிறேன் என பதிலடி கொடுக்கிறார்.

இந்நிலையில் சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருவதால்,  இவரிடம் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கூறி தயாரிப்பாளர் ஒருவர் அணுகியுள்ளார். ஆனால் இவர் 40  லட்சம் சம்பளம் கொடுத்தால் மட்டுமே தன்னால் ஆட முடியும் என கூறி அவரையே ஆட்டம் காண வைத்து விட்டார் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!