இசைஞானியின் இசையில்... சினிமாவாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 13, 2020, 7:29 PM IST
Highlights


தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஜெ.எம்.பஷீர் என்பவர் தேவராக நடிக்க உள்ளார். 

தமிழ் சினிமாவில் எப்போதுமே பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு தனி மதிப்பு உண்டு. நடிகர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழகத்தின் இரும்பு பெண்மணியான மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ‘குயின்’ வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்டோர் நடிப்பில் தலைவி படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவேகானந்தரின் தாசராகவும், நேதாஜியின் நேசராகவும் விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர். தென்மாவட்ட வருடா, வருடம் தேவர் ஜெயந்தி, குருபூஜை நடத்தி வழிபாடு நடத்தும் அளவிற்கு தெய்வத்திற்கு சமமாக நினைக்கின்றனர். சுதந்திர போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில் தயாராக உள்ளது. 

தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஜெ.எம்.பஷீர் என்பவர் தேவராக நடிக்க உள்ளார். விஜயகாந்தை வைத்து உழவன் மகன், ஊமை விழிகள், செந்தூர பூவே ஆகிய படங்களை இயக்கிய அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார். ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் சார்பில் ஏ.எம்.செளத்ரி மற்றும் ஜெ.எம்.பஷீர் ஆகியோர்  படத்தை தயாரிக்க உள்ளனர். தற்போது இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 
 

click me!