வாக்குறுதி கொடுத்த இளையராஜா! பிளான் போட்டு வேலை செய்யும் விஷால்!

Published : Jan 07, 2019, 06:28 PM IST
வாக்குறுதி கொடுத்த இளையராஜா! பிளான் போட்டு வேலை செய்யும் விஷால்!

சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.   

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. 

சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக தமிழ் திரையுலகம் சார்பாக விழா எடுக்க உள்ளனர். 

இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.

தற்போது  அதற்கான வேலைகள் துவங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் 'பெப்சி' சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கான 'MO' -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார் விஷால்

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி 'bookmyshow' - வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது.இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!