
இசைஞானி இளையராஜாவிடம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கண்ணையா என்கிற தபேலா கலைஞர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு கண்ணீரோடு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இளையராஜா அதிகம் பேச மாட்டார் என அனைவரும் கூறுவதுண்டு, அனால் சிறு வயதில் இவரும் பெரிய குறும்புகாரர் தான் என பல பேட்டிகளில் கூறியுள்ளார் இவருடைய சகோதரர், கங்கையமரன்.
அந்த வகையில், இவருடன் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக, தபேலா கலைஞகராக மட்டும் இன்றி, ஒரு நண்பன் போலவும் இருந்து வந்தவர் கண்ணையன்.
இவர் மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இளையராஜா, இன்று காலை 6 மணிக்கே அவருடைய வீட்டிற்கு சென்று, கண்ணீர் மல்க, தபேலா கலைஞர் கண்ணையனுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.