
இயக்குனர் சுசீந்திரன் முதன் முதலாக இயக்கிய வெண்ணிலா கபடி குழு படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி, சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் அவருக்கு வாங்கி தந்தது.
இதை தொடர்ந்து வெளியான 'அழகர்சாமியின் குதிரை', திரைப்படம் தேசிய விருதை பெற்றது. மேலும் 'ஆதலால் காதல் செய்வீர்' போன்ற கருத்துள்ள படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென இடம் தனி இடத்தை பிடித்துள்ளனர் சுசீந்திரன்.
இதுவரை ஒரு இயக்குனராக மட்டுமே பலராலும் பார்க்கப்பட்ட இவர், தற்போது நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியான 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்கிற படத்தில், வங்கி கொள்ளையனாகவும், போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் இவருடைய நடிப்புக்கும் பரவலாக பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. மேலும் ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை நடிகராக அறிமுகம் செய்த, இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவிற்கு நன்றி செலுத்தும் விதத்தில், அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக கொடுத்துள்ளார் சுசீந்திரன்.
மேலும் இந்த படத்தில் சுசீந்தரனை நடிக்க வைத்தது குறித்து கூறியுள்ள இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா, 'இந்த படத்தின் கதையை எழுதி முடித்ததுமே, இந்த கதாப்பாத்திரத்திற்கு, சுசீந்திரன் தான் செட் ஆவர் என என் மனதில் தோன்றி விட்டது. அனால் அவர் நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? என்கிற சந்தேகம் இருந்தபோது, சுசீந்தரனிடம் சிபாரிசு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்தவர் மிஷ்கின் தான். அவர் ஒரு இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய வேலையில் தலையிடாமல் ஒரு நடிகராக தனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார் என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் ராம் பிரகாஷ் ராயப்பா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.