கைது செய்யப்படுவாரா இயக்குநர் பா.ரஞ்சித்... நீதிமன்றம் 2 நாள் கெடு..!

Published : Jun 19, 2019, 03:45 PM IST
கைது செய்யப்படுவாரா இயக்குநர் பா.ரஞ்சித்... நீதிமன்றம் 2 நாள் கெடு..!

சுருக்கம்

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. பா.ரஞ்சித்தை 21-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. பா.ரஞ்சித்தை 21-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த முன் ஜாமீன் மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய பின்னர் ஜூன் 19-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இயக்குநர் ப.ரஞ்சித்தை நாளை மறுநாள் வரை கைது செய்ய தடை விதித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?
700 கோடி சொத்து, 20 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டில் சொகுசு வீடுகள்.! இந்தியாவை அலறவிடும் கதாநாயகி யார் தெரியுமா? | Priyanka Chopra Net Worth