இளையராஜா - எஸ்.பி.பி பிரச்சனை குறித்து... ஏ.ஆர்.ரகுமான் கருத்து....

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
இளையராஜா - எஸ்.பி.பி பிரச்சனை குறித்து... ஏ.ஆர்.ரகுமான் கருத்து....

சுருக்கம்

ilaiyaraja and sbb issue

கடந்த சில நாட்களாக இசைஞானி இளையாராஜா பாடகர் எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. 

இருவருமே இசைத்துறையில் மேதாவிகள் என்பது மட்டுமின்றி கிட்டத்தட்ட திரையுலகினர் அனைவருக்குமே நெருக்கமானவர்களாகவும் உள்ளனர். எனவே இந்த விஷயம் குறித்து கோலிவுட் திரையுலகினர் கருத்து கூறுவதை தவிர்த்து வருகின்றனர். 

இந்நிலையில் இளையராஜா, எஸ்பிபி ஆகிய இருவருக்குமே மிக நெருக்கமானவர்களில் ஒருவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். எனவே இந்த பிரச்சனை குறித்து ரகுமான் கருத்து என்னவாக இருக்கும் என்பதை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்தனர். 

 ஒரு சக இசையமைப்பாளர் மட்டுமின்றி தனது குருவின் ஒருவரான இளையராஜா நோட்டிஸ் அனுப்பியது குறித்து ரகுமான் கூறியபோது, 'இளையராஜா பாடல் சர்ச்சை தொடர்பாக யோசிக்காமல் எதுவும் கூற முடியாது' என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் முதிர்ச்சியான இந்த பதிலால் இதுதொடர்பாக அவர் இன்னும் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்பதும், இருவருக்கும் நெருக்கமான அவர், கண்டிப்பாக இந்த பிரச்சனை தீரும் வகையில் ஒரு நல்ல கருத்தை விரைவில் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
நடிகை ராஷி கண்ணா கேரவனில் 50,000 திருட்டு! கைவரிசை காட்டிய ஊழியர் - சிக்கியது எப்படி? முழு விவரம்!