இசைஞானி இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், அவமரியாதை நடந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, உண்மையாக நடந்தது என்ன என்பதை இளையராஜா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. கடந்த 45 வருடங்களுக்கு மேலாக, தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவரை இசைக்கு ஈடுயிணை இல்லை. 80 வயதை எட்டி விட்ட போதிலும், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற போல் இசையமைத்து வரும் இளையராஜா பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் சிம்போனிக் ஒன்றை உருவாக்கி, கூடிய விரைவில் அதை வெளியிட உள்ளார். அவ்வப்போது சர்ச்சைகளில் இளையராஜா சிக்குவது சகஜம் என்றாலும், தன்னை பற்றி எழுதப்படும் எந்த ஒரு கருத்துகளையும், விமர்சனங்களையும் இளையராஜா கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இசையை தவிர்த்து, ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் காட்டி வரும் இளையராஜா, அவ்வபோது தனக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில், இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அல்லு அர்ஜுன் கைது; ரஜினிகாந்த் பட வில்லன் சுமன் பரபரப்பு கருத்து!
பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி, ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்த இளையராஜா, ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் முன்பு அமைத்துள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றபோது ஜீயர்கள் அவரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன் பின்னர் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு இளையராஜா ரசிகர்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?
இந்நிலையில், இது குறித்து இளையராஜா தன்னுடைய விளக்கத்தை எக்ஸ் தள பக்கத்தில் கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது "என்னை மையமாக வைத்து, சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja)