
இசைஞானி இளையராஜாவிற்கு 2020ம் ஆண்டில் பேரிடியாக அமைந்தது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் தாக்கலிருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த பாடும் நிலா எஸ்.பி.பி. செப்டம்பர் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். தன்னுடைய நீண்ட கால நண்பனை இழந்த இளையராஜா திருவண்ணாமலை எஸ்.பி.பி.க்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
அதன் பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்கும் தன்னுடைய அறைக்கு கடைசியாக ஒருமுறை சென்று தியானம் செய்ய ஆசைப்பட்டார். அதற்காக நீதிமன்றம் வரை சென்ற இளையராஜா, இறுதியில் பிரசாத் ஸ்டுடியோவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். பின்னர் ஒரு வழியாக அந்த பிரச்சனை தீர்ந்து தன் பொருட்களை இளையராஜா எடுத்துச் செல்ல பிரசாத் ஸ்டுடியோஸ் ஆட்கள் அனுமதி அளித்தார்கள். ஆனால் இளையராஜாவின் அறையை தற்போது இல்லை என்றும், அவருடைய பொருட்கள் குடோனில் வீசப்பட்டு சேதமடைந்ததாகவும் செய்தி கிடைத்ததை அடுத்து மிகவும் மனவேதனை அடைந்த இளையராஜா அங்கு செல்லவே இல்லை.
இப்படி அடுத்தடுத்து சோகங்களால் மன வருத்தத்தில் இருக்கும் இசைஞானி இளையராஜாவிற்கு மற்றொரு துக்கம் நடந்துள்ளது. இசைஞானியின் மைத்துனரும், பிரபல பேஸ் கிட்டார் கலைஞருமான சசிதரனின் திடீர் மரணத்தால் இளையராஜா கவலையில் ஆழ்த்துள்ளார். இளையராஜாவின் பல்வேறு வெற்றிப் பாடல்களுக்கு பேஸ் கிட்டார் வாசித்தவர் சசிதரன், அதுமட்டுமின்றி தமிழகத்தில் பேஸ் கிட்டார் வாசிப்பவர்களில் மிகவும் பிரபலமானவர்.
அப்படிப்பட்ட திறமைசாலி மட்டுமல்லாது, இளையராஜாவின் மனைவி ஜீவாவின் சகோதரர், உறவு முறையில் இளையராஜாவிற்கு மைத்துனர். தன்னுடைய இசை பயணத்தில் ஏற்கனவே நண்பன் எஸ்.பி.பி.யை இழந்த இளையராஜா, தற்போது திறமையான இசைக்கலைஞரும், மைத்துனருமான சசிதரன் மரணத்தால் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.