
இயக்குனர் மாரி செல்வன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, 'கர்ணன்' திரைப்படத்தின் டீசர் மற்றும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி, இன்று காலை வெளியான நிலையில் தற்போது தனுஷ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மாமனாரை வைத்து பேட்ட இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மருமகனை வைத்து என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தளபதியின் 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், 'ஜகமே தந்திரம்' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிடாமல் திரையரங்கில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் படக்குழுவினர் இதுவரை திரையரங்கில் தான் 'ஜகமே தந்திரம்' வெளியாகும் என உறுதியாக கூறவில்லை.
மேலும் இப்படத்தின், தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷைப் பின் தொடர்வதிலிருந்து விலகியது பரபரப்பாக பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையே மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள 'கர்ணன்' திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் இதற்க்கு நன்றி தெரிவித்து, 'ஜகமே தந்திரம்' படத்தின் தயாரிப்பாளரை வெறுப்பேற்றுவது போல் தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் தனுஷ் தெரிவித்துள்ளதாவது, 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 2021ல் தியேட்டர்களில் வெளியாகிறது. தேவையான சமயத்தில் உற்சாகமூட்டும் தேவையான ஒரு செய்தி. தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் சினிமா மற்றும் திரையரங்கை நம்பி வாழும் அனைவரையும் நினைத்து வெளியிடுவதற்கு, நன்றி தாணு சார். என்னுடைய ரசிகர்கள் சார்பாக மிகப் பெரும் நன்றி. இது அவர்களுக்கு பல அர்த்தத்தைக் கொடுக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் இந்த அறிக்கை 'ஜகமே தந்திரம்' தயாரிப்பாளரை மறைமுகமாகக் குறிப்பிடுவது போலவும், தன் ரசிகர்களுக்கு ஆதரவு சொல்வது போலவும் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.