
“ஒரு வேலை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் நான் இதுவரை சம்பாதித்த பெயரைக் கெடுத்துக் கொண்டிருப்பேன்” என்று இயக்குநர் கௌதமன் தெரிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஒருபக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், மருபக்கம் விஜய் டிவியின் மானத்தோடு சேர்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் மற்றும் கமல் ஹாசனின் மானமும் கப்பலேறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிறைய பிரபலங்களை கேட்டுள்ளனர். அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னையும் அழைத்தார்கள் அதற்கு நான் வர மாட்டேன் என்று கூறியிருந்தேன் என அண்மையில் கூறியிருந்தார். நல்ல வேளை தப்பித்தேன் என்று பெருமூச்சும் விட்டிருப்பார்.
இந்த நிலையில் இயக்குனர் கௌதமன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறியது:
“என்னையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். போட்டி விவரங்களை கேட்டதும் இதற்கு சிறையே மேல் என்று கூறிவிட்டேன்.
பெரிய தொகை கொடுப்பதாகவும் கூறினார்கள் ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் கொள்கையை பரப்பலாம் என்றார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு என் கொள்கையை மக்களிடம் சொல்வது ஏமாற்று வேலை என்று சொன்னேன்.
ஒரு வேலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் நான் இதுவரை சம்பாதித்த பெயரை கெடுத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.