
'டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது ,
"டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.
துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்." என்று பாராட்டி வாழ்த்தினார்.
இப்பட த்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குநர் விக்கி இயக்குகிறார்.
பிரகாஷ்ராஜ் , சீமான் , குஷ்பூ ,ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா ,கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப் ,லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி , மோகன்ராம் , சேத்தன் , தரணி, அம்மு ராமச்சந்திரன் , பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் .
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றுமொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ். பழனி கவனிக்கிறார்.. இசை ‘இருட்டறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ், சண்டைக் காட்சி - அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.