அந்த ஒரு படம் போதும்... சத்தியமா இனி அப்படி நடிக்க மாட்டேன்.... புலம்பும் பிரபல நடிகை...!

Published : Mar 14, 2020, 02:35 PM IST
அந்த ஒரு படம் போதும்... சத்தியமா இனி அப்படி நடிக்க மாட்டேன்.... புலம்பும் பிரபல நடிகை...!

சுருக்கம்

ஆனால் அப்படி நடித்தது தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புது பிரச்சனையாக உருமாறியுள்ளது.   

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக ஹீரோவுடன் டூயட் பாட விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இதையும் படிங்க: காவி நிறத்திற்கு மாறிய “மாஸ்டர்” டீம்... ஐ.டி.ரெய்டால் விஜய் அடித்த அந்தர் பல்டி...!

மிகப்பெரிய திரைக்குடும்ப பின்னணியைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் அதை பெரிதாக  காட்டிக்கொண்டதில்லை. கதைக்கு முக்கியமான கேரக்டர் என்றால் எந்த வேடத்திலும் நடிக்க தயாராக இருந்தார். அப்படித்தான் அம்மா, தங்கை போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார். ஆனால் அப்படி நடித்தது தான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புது பிரச்சனையாக உருமாறியுள்ளது. 

இதையும் படிங்க: "எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பேட்டி ஒன்றில், இனி அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன். அப்படி நடிப்பதால் பிரபல நடிகர்கள் என்னுடன் ஜோடி போட தயங்குகின்றனர். எனக்கு வயது அதிகம் என ரசிகர்கள் கூட நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் இனி அந்த மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
Siragadikka Aasai : கிரிஷை அடிவெளுத்த ரோகிணி... புது பெயரை கேட்டதும் மனோஜை கலாய்த்துத் தள்ளிய முத்து